உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்-சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர்.
அப்போது இருவரும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும்போது, “உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பில் சீனா, ரஷ்யாவுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்யக்கூடாது. ரஷயாவுக்கு சீனா உதவி செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறும்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், ரஷ்யாவுடன் பேச்சு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறும்போது, “போரை நடத்துவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. உலக அமைதிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக உலகின் முதல் 2 பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சரியான பாதையில் முன்னேற வேண்டும்” என்றார்.
Reported by : Sisil.L