இலங்கைில் நேற்று (24) நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரயில் டிக்கெட் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்டர்சிட்டி, நீண்ட தூர சேவைகள் மற்றும் விஷேட அதி விரைவு ரயில்களுக்கான டிக்கெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.
அதன்படி, சில கட்டணங்கள் 50% முதல் 60% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
வழக்கமான மற்றும் பருவகால டிக்கெட் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சோமரத்ன தெரிவித்தார்.
எனினும், புகையிரதக் கட்டண உயர்வை எதிர்ப்பதாக தொழிற்சங்கம் ஒன்று தெரிவித்துள்ளது.
————–
Reported by : Sisil.L