யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் 10 சைக்கிள்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் சைக்கிள்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இந்த நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்று(6) பத்து சைக்கிள்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன
——————
Reported by : Maria.S