யாழ்ப்பாணம், நல்லூர் கோயில் வீதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றன என்று கூறப்படும் விடுதி ஒன்று யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று முற்றுகையிடப்பட்டது.
இதன்போது, குறித்த விடுதி யிலிருந்து இரண்டு பெண் கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கோயில் வீதியிலுள்ள விடுதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, அந்த விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட் டது.
இதையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நேற்று அந்த விடுதியைச் சுற்றி வளைத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் உட்பட 6 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் குருநகர், மானிப்பாய் மற்றும் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேக நபர் கள் ஆறு பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
———————–
Reported by : Sisil.L