யாழ். அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டஅரசடிக் கிராமம் கடந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில்
அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவின்படி குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தலில்  இருந்து விடுவிக்க சுகாதாரப் பகுதியினரால் யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


கடந்த வாரம் மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் அதிகளவான தொற்றார்கள் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அந்தப் பகுதி சுயதனிமைப்படுத்தப்பட்டு அப் பகுதியிலிருந்து யாரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளது.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *