வடக்கு மாகாணத்தில் நேற்று 76 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகம், யாழ். போதனா வைத்தியசாலை ஆ ய் வு கூ டங் களி ல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 56 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை,கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 06பேரும், மன்னார் மாவட்டத்தில் 04 பேரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Reported by : Sisil.L