யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று 581 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 104 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பழை மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேரும், வேலணை மருத்துவ அதிகாரி பிரி வில் 14 பேரும், யாழ். போதனா மருத்துவமனையில் 13 பேரும், கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 9 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில்
7 பேரும், நல்லூர் மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் என 70 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், செட்டிகுளம் ஆதார மருத்துவமனையில் 10 பேருக்கும், பூவரசன்குளம் பிரதேச மருத்துவமனையில் நால்வருக்கும், வவுனியா பொது மருத்துவமனையில் இருவருக்கும் என 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில், அக்கராயன்குளம் பிரதேச மருத்துவமனையில் 7 பேருக்கும், கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 4 பேருக்குமாக 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவருக்கும், மன்னார்
பொது மருத்துவமனையில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தவிர, காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் ஒருவருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவருக்கும் தொற்று
உறுதிப்படுத்தப்பட்டது.
—————-
Reported by : Sisil.L