யாழில் 31 தொற்றாளர்கள் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்பாண மாவட்டத்தில் 31 பேர் உட்பட வடக்கில் 56 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

 யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 163 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், யாழ். போதனா மருத்துவமனையில் 25 பேர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேர், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை யில் 2 பேர், ஊர்காவற்றுறை ஆதார மருத்துவ மனையில் ஒருவர் என்று யாழ். மாவட்டத்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

 
முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 6 பேர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் 3 பேர், மன்னார் பொது மருத்துவமனையில் 2 பேர் வவுனியா செட்டிகுளத்தில் ஒருவர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப் பட்டனர். தவிர, பலாலி விமானப்படை முகாமில் 8 பேரும், காங்கேசன்துறை கடற்படை முகாமில் 4 பேரும்,  இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *