யாழ்ப்பாணம் நகரில் முகக்கவசம் அணியாத 25 பேரை பொலிஸார் கைது செய்து கடுமையான எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.தீபாவளிப் பண்டிகை அண்மித்துள்ளமையால் பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்ப்பாணம் நகரில் பொது மக்கள் பெரு மளவில் கூடியுள்ளனர். இவர்களில் சிலர் கொரோனா கட்டுப்பாட்டு; விதிகளையும் மீறி வருகின்றனர். இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் நேற்று வீதிப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது முகக் கவசம் அணியாத 25 பேரை பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை சில மணிநேரம் தடுத்து வைத்து, கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.
இதேவேளை, இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் இனிவரும் நாட்களில் அதிகளவில் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
———————
Reported by : Sisil.L