யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது சீரான வானிலை நிலவுவதாக மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
மழையினால் யாழ். மாவட்டத்தில் 9 ஆயிரத்து 105 குடும் பங்களைச் சேர்ந்த 30ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை நீக்கப்படவில்லை.
கடந்த திங்களன்று கடைசியாக 240 மில்லி மீற்றருக்கும் அதிக மான மழை பெய்துள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதி கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்து 105 குடும்பங்களைச் சேர்ந்த 30ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்றார்.
———–
Reported by : Sisil.L