மேலும் 46 பேர் கொரோனாவால் மரணம்

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் மரணித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் மரணித்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 779 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 46 பேரில் 30 ஆண்களும், 16 பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் 30 – 50 வயதுகளுக்கு இடைப்பட்ட 08 ஆண்களினதும், 05 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.


அத்துடன் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 22 ஆண்களினதும் மற்றும் 11 பெண்களினதும் மரணங்களும் உறுதிப்
படுத்தப்பட்டுள்ளன.    
———————————–Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *