மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தடம்புரண்ட விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என வடகிழக்கு ரயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L