முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவர் மீது விசாரணை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இணையத்தள செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினர்.

 
முன்னாள் ஊடகப் பணியாளரான ஆவரங்காலைச் சேர்ந்த சி. ஜெயானந்தன் என்ப வரே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 12ஆம் திகதி – வெள்ளிக்கிழமை 145, கிருலப்பனை வீதி, பொல்கேன் ஹொடவில் அமைந்துள்ள பூத்தானை, கெப்பிற்றல் கட்டட 3ஆம் மாடிக்கு பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் அழைக்கப்பட்டார். அங்கு, அவரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை இடம்பெற்றது. அவரிடம், முள்ளிவாய்க் கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான இணையத்தள செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை மற்றும் அவரின் ‘வட்ஸ் அப்’ குழு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அவரின் கைத்தொலைபேசியும் பரிசோதிக்கப்பட்டது. இதன்போது,  விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களுடன்  தொடர்புகளைப் பேணுதல், அவர்கள் தொடர்பான அடையாளங்களை  வைத்திருத்தல் என்பவற்றுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர், கம்பஹா – சீதுவையில் வசிக்கும் அவரின் உறவினர்களிட மும் இவர் குறித்து விசாரிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த 12ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

 
இதேசமயம், இவர் கொழும்பில் வெளிவரும் இரு நாளிதழ்களிலும், யாழ்ப்பாணத்தில் வெளியான வார இதழிலும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *