‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ நல்லூரில் வழங்கப்பட்டது

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழினப் படுகொலையை நினைவுகூரும் வகையில் நல்லூரில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி வழங்கப்பட்டுள்ளது.


வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அமைப்பின் யாழ். மாவட்ட உறவுகளால் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்துக்கு முன்பாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி வழங்கப்பட்டது.


மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாவது நாள் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருவதையடுத்து நல்லூரில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அமைப்பின் யாழ். மாவட்ட உறவுகளால் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி வழங்கப்பட்டது.


நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவாலயப் பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *