முல்லைத்தீவு நாயாறு முதல் சாலை வரையான கடல் பிரதேசத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல முடியாத கையறு நிலையில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய இழுவைப்படகுகள் இவ்வாறு நுழைந்து கடல் வளங்களை எடுத்துச் செல்வதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டுமென மீனவ சமூகம் கோரிக்கை விடுக்கிறது.
————–
Reported by :Maria,S