முட்டை ஒன்றின் விலை திங்கட்கிழமை (22) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அடுத்த வாரத்திலிருந்து முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவை அறிவித்தது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர் சங்கம், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் ஏனைய உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கோழித் தீவன தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதன்மூலம், ஒரு முட்டைக்கு 60 முதல் 70 ரூபாவுக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
————-
Reported by :Maria.S