இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கவும், இழுவைப் படகு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் கோரி இன்று காலை ஞாயிற்றுக்கிழமை கடலில் படகுப் பேரணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு நகர துறைமுகத்திலிருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்தில் நிறைவடைந்தது.
முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பால் படகுகள் பேரணி நகருகையில் கரையிலுள்ள மீனவர் கிராமங்களிலிருந்து படகுகளில் மீனவர்களும் ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
பருத்தித்துறை துறைமுகத்துக்கு அப்பால் இருக்கும் சுப்பர்மடம், பொலிகண்டி மீனவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பருத்தித்துறை கற்கோவளம் இறங்குதுறைக்குச் சென்று அங்கிருந்து பேரணியில் பங்கேற்றனர்.
எம்.ஏ. சுமந்திரன் எம்.பியின் அழைப்பின் பேரில் இடம்பெறும் இப்போராட் டத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சி, முல்லைத்தீவு, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சம்மேளனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்துடன், இந்தப் போரட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து பாராளுமன்ற உறுப் பினர்களான எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், இரா. சாணக்கியன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து. ரவிகரன், ச. சுகிர்தன், கே. சயந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
—–
Reported by : Sisil.L