அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொண்டாலும் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல தலைவர்கள் கடந்த வாரம் மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்த போதிலும் இலங்கை மின்சார சபை அதற்குப் பதிலளிக்கவில்லை.
குறித்த நேரத்தில் எரிபொருளை வழங்கியிருந்தால் மின் தடையை குறைத்திருக்க முடியும் எனவும், ஆனால் மின்வெட்டை முற்றாக நிறுத்த முடியாது எனவும் மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதிகளவு நீரை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
————-
Reported by : Sisil.L