நாட்டில் நேற்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 475,000 ற்கும் மேற்பட்டோர் மின்சார செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் நிலவிய மழை மற்றும் பலத்த காற்றால் மின் கம்பங்கள் சேதமடைந்தமை காரணமாக ஏற்பட்ட மின்சார செயலிழப்பால் சுமார் 475,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி புத்தளம், குருநாகல், கேகாலை, கம்பாஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு பலத்த காற்று வீசியதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளமையால் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
———————
Reported by : Sisil.L