மின்சாரக் கார் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானம்

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யும் போது மின்சாரக் கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நாட்டில் காற்று மாசடைதலைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

 காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதி செயலணியின் இராஜாங்க அமைச்சரவை  உபகுழுவில் அமைச்சர் உரையாற்றினார். தற்போது வாகனமொன்று மின்சாரம் சார்ஜ் செய்த பின் செல்லத்தக்க ஆகக்கூடிய தூரம் 300 -350 கிலோமீற்றர் ஆகும்.

 பல்வேறு இடங்களில் தனியார் துறை சுமார் 400 மின்னேற்றும் நிலையங்களைக் கொண்டுள்ளது என்றும்  அந்த எண்ணிக்கையை மேலும் 350 ஆல் அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *