மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 21ஆம் திகதி ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையினர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர் என கண்டியில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் புகையிரத சேவையை ஆரம்பிப்பதை ஒத்திவைக்குமாறு சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச, தனியார் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி மாகாணங்களுக்குள் பேருந்துகளில் சன நெருக்கடியை கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளைப் பயன்படுத்த முடியாது- போதிய போக்குவரத்து வசதியின்றி மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடி குறித்து நாங்கள் அறிந்துள்ளோம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L