மருத்துவர் சுடத் சமரவீரவுக்கு எதிராக முறைப்பாடு

தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் சுடத் சமரவீர மற்றும் அப்பிரிவுக்குப் பொறுப்பான ஏனையோருக்கு எதிராக சட்டத்தரணி அருண லக்சிறி உணவடுன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

 
தவறான புள்ளி விபரங்களை சமர்ப்பித்தன் மூலம்  அதன் சட்ட ரீதியான கடமையை நிறைவேற்றத் தவறியதால் தேசிய பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.


அவர் இலங்கை தண்டனை சட்டப் பிரிவு 289இன் கீழ் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதன்படி இறப்புகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டவையா, புள்ளிவிபரங்கள் சரியானவையா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என முறைப்பாடு அளித்துள்ளார்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *