அரசு மருத்துவமனை அமைப்பில் திட்டமிட்ட சத்திர சிகிச்சைகள் தோல்வியடைந்ததால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இன்றோ அல்லது நாளையோ முடிவெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்திரசிகிச்சைக்குத் தேவையான இரத்த தட்டுப்பாடு காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இரத்த தான முகாம்கள் இரத்துச் செய்யப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கியின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்படி, விபத்துகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிசேரியன் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் போன்றவற்றுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
Reported by:Anthonippillai.R