மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விடத்தல் தீவு கிராமத்தில் கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது.
இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து கடல் நீர் கிராமங்களுக்குள் சென்றுள்ளது.
இதனால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் விடத்தல் தீவு மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
————
Reported by : Sisil.L