நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உடனடியாக தீர்க்காவிட்டால் நாடு மேலும் பொருளாதார பாதாளத்துக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி வளாகத்தில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த நிலையற்ற தன்மை நீடித்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நான் இந்த நாற்காலியில் இருக்க மாட்டேன்” என்றும் அவர் கூறினார்.
————————
Reported by : Sisil.L