சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உத்தியோகபூர்வ குழுவை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இறுதி முடிவை எட்டுவார்கள் என்று ரொய்ட்டர்ஸ் உடனான நேர்காணலில் மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை எட்டுவதற்கு முன்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இறுதி முடிவுகளை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மைக் கடன் வழங்குனர்களுடனான ஆரம்பகட்டமாக 7.1 பில்லியன் டொலர்கள் கடன் மறுசீரமைக்கப்பட உள்ளது.
reported by :Maria.S