மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய அரசாங்கத்துக்குத் தேவையான டொலர் கையிருப்பு இல்லாதது பாரிய பிரச்சினையாக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்வாக ரூபாவில் பணம் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதி முறையை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
26 நாட்களாக மூடப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
——————–
Reported by : Sisil.L