வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜொங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம் போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப் பட்டு உடனே கைது செய்யப்படுவர் எனத் தெரிவித் துள்ளது.
———–
Reported by : Sisil.L