தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
தொற்று நோயால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் அல்லது ஏதேனும் குழுக்கள் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்பான அமைச்சராக நான் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி யிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
அதிக கூட்டங்கள் காரணமாக மற்றொரு கொவிட் -19 அலை ஏற்பட்டால் நாடு கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் என்றும் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Reported by : Sisil.L