தப்பிச் செல்ல முயற்சித்த நபரின் மோட்டார் சைக்கிளில் இழுத்துப் பிடித்தவாறு சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வினவிய போது அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளைப் பின்புறமாக இழுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் ஓட்டுனர் பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். ஆனால் சுமார் எழுபது மீற்றர் சென்ற பின் குறித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதிக் கவிழ்ந்தது.
சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாய மடைந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
——————-
Reported by : Sisil.L