ஓகஸ்ட் 01 முதல் லஞ்சீற் பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும் ஓகஸ்ட் 1ஆம் திகதியின் பின் லஞ்சீற் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து இத்தொகை அதிகரிக்கப்பட்டது.
லஞ்சீற்களுக்குத் தடை இருந்தாலும் சூழலுக்குகந்த உக்கும் லஞ்சீற்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
————-
Reported by : Sisil.L