நேற்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்த நிலையில் மக்கள் முண்டியடித்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர்.வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகளில் மக்கள் அதிகளவில் கூடி பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது. நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. இந்தத் தகவல் நேற்று பிற்பகல் வேளை வெளியானதைத் தொடர்ந்து மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மற்றும் அவசிய தேவைப் பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்ததால் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன. அதேசமயம், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான வர்த்தகர்கள் பொறுப்புணர்வுடன் மக்களை வரிசைப்படுத்தி சமூக இடைவெளி பேணி குறைந்தளவானோரே சிறப்பு அங்காடிக்குள் அனுமதித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், மதுபான நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
————
Reported by : Sisil.L