பொருளாதார நெருக்கடியால் குடும்பஸ்தர் தற்கொலை

பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறிய குடிசையில் மனைவியுடன் வசித்து வந்த அவர், சேனை விவசாயியாகவும், கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.


உயிரிழந்தவர் பெரியதொரு வயலில் விவசாயம் செய்து வந்ததாகவும், அதுவும் எண்ணெய், உரம் இல்லாததால் தோல்வி அடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த குடும்பத்தினர் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் முறையான உணவைக் கூட பெற முடியாத அவல நிலையில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வருகின்றனர்.


கடந்த 29ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியே சென்ற தந்தை மாலை வரை வீடு திரும்பவில்லை. பின்பு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தவரின் சடலம் காணப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.
———–


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *