குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவ அதிகாரி ஒருவர் பெற்றோல் நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், சிவிலியனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு அதன் நடவடிக்கைகளை இடையூறு செய்ததாகவும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
—————–
Reported by:Anthonippillai.R