பெண்ணை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ஒருவரிடம் பணம் பறித்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் பணியக உத்தியோகத்தர் ஒருவர் மித்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரை ஏமாற்றி ருமேனியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பணம் வழங்கியும் உறுதியளித்தபடி வேலை வழங்கப்படாததால் பணியகத்தின் விசாரணை பிரிவில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த அதிகாரி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு ​​வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக கூறி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபரை இன்று (14) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Reported by : S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *