புத்தாண்டுக் காலத்தில் விஷேட பஸ் சேவைகள்

புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களுக்காக நாளை முதல் 15 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவைகள் இடம்பெறும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இரண்டு கட்டங்களாகச் செயல்படும் இந்த விஷேட பேருந்து சேவையை, பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு  கட்டங்களில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு பஸ்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக கடவத்தை, கடுவெல மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையங்களிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம்  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

எனினும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பஸ்களுக்கு டீசல் கிடைக்காவிட்டால் புத்தாண்டு போக்குவரத்து சேவைகளை அமுல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *