பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீப்பிடித்த பயணிகள் கப்பல் – 80 பேர் மீட்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரிலிருந்து பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதில் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் இருந்தனர்.

 
துறைமுகத்தை நெருங்கியபோது கப்பலில் தீப்பிடித்தது. அப்போது கப்பல் துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. கப்பல் முழுவதும் தீ பரவியதால் பலர் கடலில் குதித்தனர். உடனே கடலோர காவல்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். 2 பேரைக் காணவில்லை.

 அவர்களைத் தேடி வருகிறார்கள். கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக தெரிய வருகிறது.


Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *