பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் பிரேசிலில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 280 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கி தத்தளிக்கின்றன. வீதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் துரித கதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reported by : Sisil.L