கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில், கன மழை காரணமாக நெடுஞ்சாலை ஒன்றில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால், வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் இரவு நேரத்தில் வீதியில் சிக்கிக்கொண்டார்கள்.அவர்களை இராணுவ ஹெலிகொப்டர்கள் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளர்கள்.
இரவில் தன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த Cory Lysohirka, சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கிக்கொண்டார்.பின்னர் மீட்புக்குழுவினர் வந்து அவரது குடும்பத்தை மீட்டனர்.
திங்கட்கிழமை மதியம் சுமார் 275 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 50 பேர் குழந்தைகள். அத்துடன், 20 நாய்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
————-
Reported by : Sisil.L