பிரிட்டனை முன்னோடி நாடாக மாற்றியமைக்க உள்ளதாக பிரிட்டனின் புதிய பிரதமா் லிஸ் டிரஸ் (Liz Truss) உறுதியளித்துள்ளாா்.
கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் வென்ற லிஸ் டிரஸ், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளாா்.
லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக நிகழ்த்திய உரையில், அதிக ஊதியம் பெறத்தக்க வேலைவாய்ப்பு, பாதுகாப்பான தெருக்கள், ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்குரிய வாய்ப்புகளை எவ்விடத்திலும் பெறக்கூடிய வகையில் முன்னோடி நாடாக பிரிட்டனை மாற்றுவதாகக் கூறியுள்ளார்.
அத்தகைய மாற்றத்திற்காக, இன்றைய தினம் முதல் ஒவ்வொரு நாளும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் வரிக் குறைப்பு மற்றும் சீா்திருத்தங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளா்வதற்கான வலுவான திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிட், கொரோனா தடுப்பூசி விநியோகம், ரஷ்யாவின் போருக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றுக்காக போரிஸ் ஜான்சன் வரலாற்றில் பெரும் ஆற்றல் வாய்ந்த பிரதமராக நினைவுகூரப்படுவாா் எனவும் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.