பிரான்சில் உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி உணவகம் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் இறைச்சியில் செய்த உணவுகளை விற்பனை செய்யும்பொழுது குறித்த இறைச்சி தொடர்பிலான தகவல்களை வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் , இறைச்சி புதியதா அல்லது குளிரூட்டப்பட்டதா, பதப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பான விபரங்களும் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். சிறு உணவகம் முதல், வைத்தியசாலைகள் , பாடசாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சட்டம் கட்டாயமாகும்.
குறித்த சட்டமானது மார்ச் 1ஆம் திகதியில் நடைமுறைக்கு வருகின்றது என இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L