சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியல் கட்சித் தலைவர்களின் சிறப்பு கூட்டமொன்று இன்று(15) முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமானது.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற அலுவல் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் பதவிக்கான வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் எட்டியுள்ள ஒருமித்த கருத்து குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
இதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் தமது வேட்புமனு தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
———————-
Reported by :Maria .S