பால் மாவின் விலையை மீண்டும் திருத்தியமைக்க வேண்டியிருக்கும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த முறை பால்மாவின் விலை அதிகரித்ததன் பின்னர் உலகச் சந்தையில் பால் மாவின் விலை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அந்நியச் செலவாணிக் கையிருப்பு நெருக்கடியால் கடன் பத்திரங்களைத் திறக்க முடியாமல் பால் மா இறக்குமதியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போதைய பால் மா தட்டுப்பாட்டைச் சமாளிக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் அசோக பண்டார சுட்டிக்காட்டினார்.
———————–
Reported by : Sisil.L