பால் மா, கோதுமை மா, சீமெந்து விலைகளை அதிகரிக்க அனுமதி

பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கைச் செலவுகள் குழு நேற்று அனுமதி வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்தத் தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கைச் செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.  
—————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *