உலகச் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி ஒரு கிலோ பால் மா பைக்கற் 600 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,345 ரூபாவிலிருந்து 1,945 ரூபாவாகவும், 400 கிராம் பால் மா பைக்கற் ஒன்று 260 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் விற்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் மாவின் விலையை அரசாங்கம் இப்போது கட்டுப்படுத்தவில்லை என்பதுடன் விலை நிர்ணயம் நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
எனினும் புதிய விலை அதிகரிப்பு நாளை அறிவிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
—————-
Reported by : Sisil.L