எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 2 – 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் , நாளை ஜூலை 25ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதே நேரம் எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிரமங்கள் காரணமாக மறு அறிவித்தல் வரை, நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளில் நடத்த வேண்டும் எனவும், எஞ்சிய 2 நாட்களும் வீடுகளில் இணைய வழியில் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தென் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் வாரத்தில் 5 நாட்களும் நடத்த தீர்மானித்துள்ளதாக தென் மாகாண ஆளுநரின் பணிப்பின் பேரில் தென் மாகாண கல்வி செயலாளர் கடிதம் மூலம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
Reported by :Maria.S