பாகிஸ்தானில் மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பல நகரங்களில், மகப்பேறு வார்டுகள் மற்றும் குழந்தைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன, மேலும் ஒரு படுக்கையில் நான்கு குழந்தைகள் இருப்பதாக வெளிநாட்டு அறிக்கைகள் கூறுகின்றன.
கர்ப்பகால வார்டுகளில் ஒரு படுக்கையில் இரண்டுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் இருக்கும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.
1998ஆம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானில் குழந்தைப் பிரிவுகள் மற்றும் மருத்துவமனை வசதிகளை விரிவுபடுத்த எந்த அரசும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தற்போது இந்த நெருக்கடி நிலை அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் சிசேரியன் உட்பட 23 பிரசவங்கள் நடைபெறுவதாகவும், ஆனால் சில மருத்துவமனைகளிலேயே அதற்கான ஒரு சத்திர சிகிச்சை அறை மட்டுமே இருப்பதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
———-
Reported by : Maria.S