பள்ளிவாசல்களில் தொழுகையில் கலந்து கொள்ள அனுமதி

நாட்டில் கொரோனா தொற்றுக் குறைந்து வரும் நிலையில், இன்று முதல் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையைப் பள்ளி வாசல்களில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி, 50 பேருடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஜும்மா தொழுகை முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.


மேலும், பள்ளிவாசலில் ஒன்றுகூடுவதை முற்றாகத் தவிர்த்துச் செயற்படுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, தொழுகையில் கலந்து கொள்ள சமுகமளிப்பவர்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *