பல தனியார் பஸ் சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தனியார் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் இன்று காலை பணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த பல பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளானதாக தெரியவருகிறது. எனினும், உள்ளூர் பஸ்கள் வழக்கம் போல் இயங்கியதுடன் தனியார் பஸ்களும் சுமார் 10 சதவீதம் இயங்கின.
எரிபொருள் பெறப்பட்ட பகுதிகளில் குறுகிய பயண சேவை பஸ்கள் மாத்திரமே இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பஸ் பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்களைக் குறைக்கும் முகமாக லங்கம பஸ்களின் சேவைகள் முன்பை விட இன்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தமது பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை எனவும் தெரிவித்து தனியார் பஸ் சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
————–
Reported by :Maria.S