பல்கலைக்கழக மாணவர்கள் இன்று களனியிலிருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பு (IUSF) ஏற்பாடு செய்திருந்த இந்த அணிவகுப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாளை (சனிக்கிழமை) காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பெரும் போராட்டங்களுக்குத் தயாராகும் வகையில் போராட்டக்காரர்கள் கொழும்பினுள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நாளை காலி முகத்திடலில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியைக் கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது.
Reported by:Maria.S